வடக்கு ஆளுனர் செயலகம் முன் சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

Date:

வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் தர வேண்டும் என வடமாகாண ஆளுநர் செயலகம் முன் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் யுத்த காலத்தில் சேவையாற்றிய 840 பேரை சுகாதாரத் தொண்டர்களாக வடக்கு மாகாண சபையினால் உள்வாங்கப்பட்டனர்.

பின்னர் வடமாகாண ஆளுநர் குரே காலத்தில் 130 பேர் சுகாதார தொண்டர்கள் தற்காலிகமாக கடமையாற்றிய நிலையில் அவர்களையும் இணைத்து 970 பேர் சுகாதாரத் தொண்டர்களாக பணி நிரந்தர நியமனம் கேட்டு போராடி வருகிறோம்.

சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வு இரு தடவைகள் இடம்பெற்ற நிலையில் ஊழல்கள் இருப்பதாக நாம் அறிகிறோம்.

இறுதி யுத்தத்தின் போது கடமையாற்றிய சுகாதார தொண்டர்கள் இறுதியாக இடம்பெற்ற நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவில்லை.

எம்முடைய சகல ஆவணங்களும் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட நிலையில் நேர்முகத் தேர்விற்கு எம்மை அழைக்காமை பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

ஆகவே வடமாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக நிரந்தர நியமனம் கேட்டு விண்ணப்பித்த 970 பேருக்கும் குறித்த நியமனத்தை பாகுபாடின்றி தர வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்