நாட்டில் லொக் டவுன் மீண்டும் அமுல்ப்படுத்தப்படாது. ஆனால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த சில நாட்களில் செயல்படுத்தப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகள் செயற்படுத்தப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவசர நடவடிக்கைகளை எடுக்க இன்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது என தெரிவித்தார்.
வைரஸ் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சுகாதார அதிகாரிகள் இன்று கூட்டங்களை நடத்தினர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயும் கலந்து கொண்டார்.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.