முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனத்துடன் கார் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனங்களை அவதானிக்காது தென்பகுதி நோக்கி பயணித்த கார் தரித்து நின்ற வானுடன் மோதியுள்ளது. விபத்துக்குள்ளான வான் முன்னால் தரித்த நின்ற மோட்டார் சைக்கிளுடன் சென்று எதிரே நின்ற ரிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளல் தரித்திருந்த ஒருவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.