கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மேலும் 14 பேருக்கு தொற்று!

Date:

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 14 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 22 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான பொலிஸாருடன் நெருக்கமான தொடர்பிலிருந்த பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன.

இதன்போதே புதிதாக 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான பொலிஸாரின் மொத்த எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்