இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,66,161 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,66,161 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,26,62,575 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37,45,237 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை கொரோனாவிலிருந்து 1,86,71,222 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கொரோனாவிலிருந்து 3,53,818 பேர் குணமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,46,116 ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1