வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் பாக்கு தெண்டலுடன் ஆரம்பித்தது!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (10) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்கள் ஆலயத்துக்கு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆலய சம்பிரதாய கிரிகைகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று ஆலய நிவர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணி கிரிகைகளை ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஆர்ம்ப நிகழ்வாக இடம்பெறும் பாக்குத்தெண்டல் உட்சவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றது.

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிப்பதற்காக அவர்களது வீடுகளுக்கு சென்று பாக்குத்தெண்டல் இடம்பெற்றது.

கண்ணகி தெய்வத்தின் பக்தனாகிய பக்தஞானி தென்னிந்தியாவில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் தங்கியிருந்த காலத்தில் வற்றாப்பளை பொங்கல் சடங்குகளை ஓர் சீர் வரிசைப்படுத்துவதற்காக பாக்குத்தெண்டல் தொடக்கம் சிலாவத்தை தீர்த்தக்கரையில் தீர்தம் எடுத்தல், காட்டு விநாயகர் ஆலயத்தில் தீபமேற்றுதல் போன்ற பல சடங்குகளை அருளி நின்றார்.

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாகப்பொங்கல் சடங்கு பற்றி கோவிலுடன் நீண்ட தொடர்பை பேணி வந்த குடியானவர்களுக்கு மரவு வழியாக அறிவிக்கும் பொங்கலின் ஓர் ஆரம்ப சடங்கே இந்த பாக்குத்தெண்டல் உற்சவமாகும்.

பாக்குத்தெண்டல் இடம்பெறும் இந்த சம்பிரதாய நிகழ்வோடு ஆரம்பமாகும் உற்சவம் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி விசாக பொங்கலுடன் நிறைவடையும்.

அந்தவகையில் இன்று பாக்கு தெண்டலுடன் ஆரம்பமாகும் இவ்வாண்டுக்கான (2021) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தில் 17-05-2021 திங்கட்கிழமை தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் அதனை தொடர்ந்து 24-05-2021 திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பொங்கல் உற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வருடாந்த உற்சவ நிகழ்வுகளில் இம்முறை பக்தர்கள் கலந்துகொள்வது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்