கிழக்கில் வேகமாக பரவும் கொரனா மூன்றாவது அலை: கிழக்கு மாகாண பணிப்பாளர்!

Date:

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், வெளிமாவட்டங்களிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் இன்று (09) தெரிவித்தார்.

கடந்த 24 மணி கிழக்கு மாகாணத்தில் 77 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் அம்பாறை – தெஹியத்தகண்டி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 23 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,804 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,229 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,520 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 959 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 5,512 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தெஹியத்தக்கண்டி, திருகோணமலை, உப்புவெளி, மட்டக்களப்பு, உகன, களுவாங்சிக்குடிய, கிண்ணியா ஆகிய 07 வைத்தியதிகாரி பிரிவுகள் மிக அவதானத்திற்குரிய வலயங்களாக காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 29,110 பேருக்கும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 10,775 பேருக்கும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 22,838 பேருக்கும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 21,809 பேருமாக மொத்தம் 84 ஆயிரத்தி 532 பேருக்கு பீ.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றின் மூன்றாவது வது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் 940 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 248 பேரும், அம்பாறையில் 614 பேரும், கல்முனையில் 37 பேருமாக மொத்தம் 1,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2வது கொரோனாத் தொற்று அலையில் 26 பேரும், 3வது கொரோனாத் தொற்று அலையில் 23 பேருமாக மொத்தம் இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 49 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் புதிதாக 1,500 படுக்கைகளைக் கொண்ட 04 சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்