யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் கொரொன தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
வடக்கில் இன்று 21 கொரோனா கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 15 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
யாழ்ப்பாணம் மேலதிக அரசாங்க அதிபர் தெல்லிப்பளை ஆதார வைத்திய
இன்று வடக்கில் 486 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் யாழ் மாவட்டத்தில் 15 பேரும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் தலா 2 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலை 4 பேர், தெல்லிப்பளை வெளிநோயாளர் பிரிவில் 3 பேர் (இதில் ஒருவர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம் கர்ப்பிணி பெண், கைதடி உணவக உரிமையாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பருத்திததுறை நகரசபை ஊழியர், காரைநகர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.
யாழ், திருநேல்வேலி நொதேர்ண் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவரும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றிற்குள்ளாகினர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், தர்மபுரம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட 2 பேர், வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவர், முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற இருவர தொற்றிற்குள்ளாகினர்.




