கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாணவன் கைது!

Date:

கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்து பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பல்கலைக்கழக மாணவன் கைது !

கிழக்கு பல்கலைக்கழக விடுதிக்கு அருகில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 25 வயதுடைய மாணவனை கைது செய்துள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்றுவரும் மாணவியை சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆண்கள் விடுதிக்கும் பெண்கள் விடுதிக்கும் இடையிலுள்ள அரைகுறையாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் அருகிலுள்ள பற்றை பகுதில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அந்த பகுதிக்கு சிலர் சென்ற போது, மாணவி திடீரென கூக்குரலிட்டார்.

இதனையடுத்து உடனடியாக மாணவனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட மாணவன் விடுதியில் தங்கிருந்து வர்த்தகப்பிரிவில் கல்விகற்று வரும் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.

மாணவி தற்போதும் முழுமையான சுயநினைவு திரும்பாமல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்