ஊர்காவற்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று வெளியான பிசிஆர் முடிவுகளில் அவர் தொற்றிற்கு உள்ளானது தெரிய வந்தது.
நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.
அண்மையில் உடுவில் பிரதேச செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களிற்கு நடைபெற்ற சிங்கள மொழி கற்கை நெறி தொடர்புடைய நிகழ்வில் அவர் கலந்து கொண்டிருந்தார். இந்த கற்கை நெறியில் கலந்து கொண்டிருந்த சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிலர் தொற்றிற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடந்த சிங்கள மொழி கற்கை நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஒரு கொரோனா தொற்றாளர் கலந்து கொண்டதால் ஏராளமாக அரச உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தககது.
பல வாரங்களாகவே மக்கள் தேவையற்ற விதத்தில் ஒன்று கூட வேண்டாமென அரசு அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.