அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மர்மநபர்களால் திடீர் துப்பாக்கிச்சூடு!

Date:

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்மநபர்களால் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து நியூயார்க் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 2 அல்லது 3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சினையை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும், துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 3 பேரும் அப்பாவி பொதுமக்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், அனைவருக்கும் காலில் தான் துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்