கொரோனாவால் நாளுக்கு நாள் உயிர்ப்பலி ; அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Date:

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32.83 கோடியை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கி உள்ளன.

சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,283,183 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 157,523,926 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 134,777,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 108,617 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.83 லட்சத்தை தாண்டியது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.60 இலட்சம் செலவாகிறது!

ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான...

“எந்த உணவுகளை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” – சுற்றுலாப் பயணிகளுக்கு திரிணமூல் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்​சிக்கு வந்​தால், பிரபல​மான மீன் உணவு வகைகளுக்​குத்...

நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்