கொரோனா நோயாளிகளை சுகாதார மையங்களில் சேர்ப்பதற்கான தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தியுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் கொரோனா உறுதிசெய்யப்பட்ட சோதனை அறிக்கையை கொண்டு செல்வது இனி கட்டாயமில்லை.
சுகாதார அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, “சி.சி.சி, டி.சி.எச்.சி அல்லது டி.எச்.சி ஆகியவற்றின் சந்தேகத்திற்கிடமான வார்டில் (கொரோனாவின்) ஒரு கொரோனா சந்தேக நபர் அனுமதிக்கப்படலாம்.
எந்தவொரு நோயாளிக்கும் சேவையை மறுக்கக் கூடாது. இதில் நோயாளி வேறு நகரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் ஒக்சிஜன் அல்லது அத்தியாவசிய மருந்துகள் போன்றவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.” என உத்தரவிடப்பட்டுள்ளது.
“எந்தவொரு நோயாளியும் மருத்துவமனை அமைந்துள்ள நகரத்திற்கு சொந்தமில்லாத செல்லுபடியாகும் அடையாள அட்டையை தயாரிக்க முடியாது என்ற அடிப்படையில் அனுமதிக்க மறுக்கப்படுவதில்லை. மருத்துவமனையில் சேருவது தேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.” என்று சுகாதார அமைச்சகம் மேலும் கூறியது .
இதற்கிடையே நேற்று, கொரோனா காரணமாக இந்தியா 4,187 இறப்புகளைப் பதிவுசெய்தது. மேலும் நேற்று புதிதாக 4,01,078 புதிய பாதிப்புகள் பதிவானதன் மூலம், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,18,92,676 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டியது மே 1’க்குப் பிறகு இது நான்காவது முறையாகும். கடந்த 16 நாட்களில் இந்தியா தினசரி மூன்று லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளுடன் தொடர்கிறது. மேலும் கடந்த 10 நாட்களாக தினசரி 3,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.