பேஷியல் செய்ய கொழும்பு சென்று வந்த யுவதிக்கு கொரோனா!

Date:

வடமாகாண சித்த வைத்திய திணைக்களத்தின் கீழ் வலிகாமம் மேற்கிலுள்ள கிராமிய சித்த வைத்திய நிலையமொன்றில் பணியாற்றும் பெண்உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இணைக்கப்பட்ட பயிலுனர் உத்தியோகத்தர் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

நேற்றுஇரவு வெளியான பிசிஆர் முடிவில் அவர் தொற்றிற்குள்ளானமை உறுதியானதை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களிடம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் யுவதி சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார். எனினும், கடமைக்கு சமூகமளித்த நிலையில், கொரோனா அறிகுறிகள் வலுவடைந்ததை தொடர்ந்து, பிசிஆர் மாதிரி பெற்ற பின்னர் கடமைக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற போதே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

பாதிக்கப்பட்ட யுவதி முக ஒப்பனை துறையில் பணியாற்றுகிறார். கொழும்பில் நடந்த திருமணமொன்றிற்கு மணமகள் ஒப்பனைக்காக அண்மையில் சென்று வந்ததை தொடர்ந்தே தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்