வவுனியாவில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி, அடித்து துன்புறுத்தி, வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வைத்து இன்று (7) அவர் கைது செய்யப்பட்டார்.
சில தினங்களின் முன்னர் இளைஞர் ஒருவர் கைகள் கட்டப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தது.
பண கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞன் நிர்வாணப்படுத்தப்பட்டு, அவரின் முன்பாக பணத்தாள்கள் வீசப்பட்டே, சித்திரவதை இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்னர்.
அவரை, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.




