மட்டக்களப்பில் இருவரின் உயிரை பறித்த விபத்தின் காரணம் இதுவா?

Date:

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே விபத்து நேர்ந்தது. நேற்றிரவு 10.50 மணியளவில் விபத்து நடந்தது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியை சேர்ந்த பரமேஸ்வரன் தனுஜன் (31), யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் வினோகா (31) ஆகியோரே உயிரிழந்தனர்.

சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன. அதன்பின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் வினோகா வாகனத்தை செலுத்தியதாக கருதப்படுகிறது. வாகனம் அதிவேகமாக பயணித்து விபத்து நேர்ந்தது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இருவரும் ஆசனப்பட்டியை அணியவில்லை. விபத்தையடுத்து வாகன கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு இருவரும் வெளியே வீசப்பட்டனர்.

பரமேஸ்வரன் தனுஜன் திருமணமானவர். கொழும்பு- மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர். அவர் மனைவி, பிள்ளைகளை கொழும்பில் விட்டு விட்டு, திரும்பி வரும்போதே விபத்திற்குள்ளாகினார்.

வினோகா திருமணமாகி பிரிந்து வாழ்கிறார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்தவர்கள் மதுபோதையில் இருக்கவில்லையென்பது உறுதியாகியுள்ளது. இதனால் தூக்க கலக்கம், அதிவேகம் போன்ற காரணங்களினால் விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது.

 

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்