தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்த நாசர்; கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்!

Date:

தமிழக முதல்வராக பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர். அவருடன் மனைவி கமீலாவும் சென்றிருந்தார்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கிறார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தன் மனைவி கமீலாவுடன் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நானும் எனது மனைவி, தயாரிப்பாளர் கமீலா நாசரும் சந்தித்து வாழ்த்து கூறினோம். அப்போது, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தற்போது உள்ள சூழலையும், அதனால் பென்ஷன் பெற முடியாமல் இந்த கொரோனா காலத்தில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களின் நிலைமையையும் எடுத்துக் கூறினேன். கண்டிப்பாக ஆவண செய்கிறேன் என்று கூறினார். அதற்கு அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முதல்வராக பதவியேற்க இருக்கும் அவருக்கு, அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்!

ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி...

நாடு திரும்பிய பணிப்பெண்ணுக்கு எமனான டிப்பர்

டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக...

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்