யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இளம் யுவதியொருவருடன் அத்துமீறி நடந்து அங்கசேட்டை புரிந்த இரண்டு இளைஞர்கள் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 7.00 மணியவில் இந்த சம்பவம் நடந்தது.
யாழ் மாவட்டத்தின் பிறிதொரு பகுதிக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறுவதற்காக மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற யுவதியை, அங்கு நின்ற இருவர் அசௌகரியப்படுத்தி, அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பேருந்து நிலையம் பரபரப்பாக இயங்கிய நேரத்திலும், மது போதையில் அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர்.
யுவதி உதவிகோரியதையடுத்து அங்கு குவிந்தவர்கள், இரண்டு இளைஞர்களையும் பிடித்து நையப்புடைத்தனர். பின்னர் பொலிசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதானவர்களில் ஒருவர் 20 வயது மதிக்கத்தக்கவர் என கூறப்படுகிறது.




