மன்னாரில் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்த மாணிவிகள் இருவர் கலைப்பிரிவில் சாதனை

Date:

வெளியாகிய உள்ள 2020 ஆம் ஆண்டுக்கான உயர் தர பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமாக காணப்படும் மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த  இரண்டு மாணவிகள் கலைப்பிரிவில் மன்னார் மாவட்ட மட்டத்தில் 1 ஆம் மற்றும் 4ஆம் இடத்தை பெற்று  மடுக்கரை கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவிகளான  ஜெயரத்தினம் ஜெயப்பிரதா  கலைப்பிரிவில் 3 A சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 1 ஆம் இடத்தினையும்,  இராமநாதன் புஸ்பலீனா கலைப்பிரிவில் 2 A, B பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளனர்.
குறித்த மாணவிகள்  பல்வேறு அசௌகரியங்களுக்கும்,  சவால்களுக்கும்  முகம் கொடுத்து மிகவும் தூர பிரதேசமாக இருக்கும் தங்களுடைய கிராமத்திலிருந்து நானாட்டான் பிரதேசத்தில் உள்ள  டிலாசால் கல்லூரிக்கு சென்று கல்வி கற்றனர்.
குடும்பத்தில் உள்ள வறுமை ஒரு தடை இல்லை என்று மாவட்ட மட்டத்தில்  சிறந்த இடத்தை பெற்று  தங்களுடைய கிராமத்திற்கும் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை தேடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்