ரசிகரின் ஆசையை நிறைவேற்றி வைத்த விஜய் தேவரகொண்டா!

Date:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தன் தீவிர ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அந்த ரசிகரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவின் இரண்டாம் அலையில் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகரான ஹேமந்த் என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

விஜய் தேவரகொண்டாவுடன் ஒரேயொரு முறை பேச வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவை எட்டியிருக்கிறது. இதையடுத்து அவர் ஹேமந்துடன் வீடியோ கால் மூலம் பேசியிருக்கிறார்.

மரண படுக்கையில் இருந்த ஹேமந்த் தன்னுடன் சிரித்துப் பேசியதை பார்த்த விஜய் தேவரகொண்டாவுக்கு அழுகை வந்துவிட்டது. எப்பொழுதும் கெத்து காட்டும் விஜய் கண்கலங்கியதை பார்த்த ரசிகர்களும் எமோஷனல் ஆகிவிட்டார்கள்.

தான் ஹேமந்துடன் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விஜய் தேவரகொண்டா கூறியதாவது,

உன்னை மிஸ் செய்கிறேன் ஹேமந்த். நாம் பேசியதில் மகிழ்ச்சி. உன் இனிமையான சிரிப்பை பார்க்க முடிந்தது. உன் அன்பை உணர்ந்தேன். கண்ணீருடன் உனக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.

என்னை அணுகி, ஹேமந்துடன் பேச வைத்த அனைவருக்கும் நன்றி. உன்னை மிஸ் பண்ணுவோம் ஹேமந்த். இந்த வீடியோ கால் நினைவு மற்றும் நீ என்றுமே என் டைம்லைனில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்த விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஹேமந்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் எழுத்தாளரின் புத்தங்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் எழுத்தாளர் பி. பிரதீபனின் இரண்டு புத்தகங்களை...

ஆசிரியை மதிவதனிக்கு நீதி கோரி வவுணதீவில் போராட்டம்

மட்டக்களப்பு திமிலைதீவு கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி...

ஹிஜாப் மீதாத தடையால் கல்முனை வைத்தியசாலை முஸ்லிம் ஊழியர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது: மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையின் போது தலைக்கவசம் (ஹிஜாப்) மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்