பல்கலைகழக விரிவுரையாளர், சுகாதார பரிசோதகர், வங்கி ஊழியர், சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்: இன்றைய வடக்கு தொற்றாளர் விபரம்!

Date:

வடமாகாணத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று வட மாகாணத்தில் 721 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 30 பேரும், வவுனியா மாவட்டத்தில் 9 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், கொடிகாமம் இலங்கை வங்கி ஊழியர், சாவகச்சேரி பிரதேசசபை உத்தியோகத்தர்கள் 3 பேர், கொடிகாமம் சந்தை, வர்த்தக நிலைய ஊழியர்கள் 12 பேர், கைதடியிலுள்ள வடமாகாணசபை பிரதம செயலாளர் அலுவலகத்தில் ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியிலுள்ள 4 பேர், தெல்லிப்பளை விடுதி நோயாளர்கள் 2 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 2 பேர், அச்சுவேலி வைத்தியசாலையில் 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நோயாளர் ஒருவர், யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளர் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர், தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை நிலையத்தில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்

வவுனியா வைத்தியசாலை விடுதி நோயாளர்கள் 4 பேர், வவுனியா சுகாதார சேவைகள் பிரிவில் 5 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில், தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த 2 பேர், பொலிஸ் உத்தியோகத்தர், பல்கலைகழக மாணவன், வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகர் ஆகியோர் தொற்றிற்குள்ளாகினர்.

 

spot_imgspot_img

More like this
Related

தஞ்சையில் காவல் நிலைய விசாரணைக்குப் பின் உதயநிதி விடுவிப்பு

‘இரட்டை அர்த்த’ பேச்சு விவகாரத்தில் கைதான சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...

மொட்டு செயலாளரின் மிரட்டலை சிஐடி விசாரிக்கும்

பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...

ஈரான் போரின் போது அமெரிக்கா தனது நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் ‘ஏறக்குறைய அனைத்தையும்’ பயன்படுத்தியுள்ளது

ஈரானுடனான தனது ஐந்தாண்டுப் போரின் போது, ​​அமெரிக்க இராணுவம் தனது கையிருப்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்