பருத்தித்துறையில் முகக்கவசம் அணியாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் சோதனை!

Date:

பருத்தித்துறையில் முகக்கவசம் சரியான முறையில் அணியாதோரை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களால் முகக்கவசத்தை அணியாத, சரியாக அணியாத பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்த உள்ளதோடு பிசிஆர் பரிசோதனைகயைும் மேற்கொள்ளவுள்ளனர்.

நேற்று (4) பருத்தித்துறை பொதுசுகாதார பரிசோதகர்கள் ஜென்சன் றொனால்ட் மற்றும் சுதாகரன் தலைமையில் பருத்தித்துறை பொலிஸர், கற்கோவளம் இராணுவத்தினர், கிராமசேவகர்கள்கள் இணைந்து கடும் பரிசோதனைகளை மேற்கொணனடனர்.

பருத்தித்துறை பஸ்நிலையம், கடைத்தொகுதிகள், மீன்சந்தை, அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், பொதுபோக்குவரத்து, கிராமக்கோட்டு சந்தி, தம்பசிட்டிவீதி, ஓடக்கரை என பல இடங்களிலும் இப்பரிசோதனைகள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் சரியான விதத்தில் முகக்கவசம் அணியாது மூக்கு வெளித்தெரியவும் நாடிகளிலும் அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

இனங்காணப்பட்டவர்கள் சுயதனிமைப்படுத்தல் மற்றும் பிசீஆர் பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்காவிடின் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய வகையான கொரேனா வைரஸ் வீரியமாகப் பரவுவதோடு காற்றில் ஒருமணிநேரம் நிலைத்திருக்கவும் கூடியது. இது தற்போது இளைஞர் குழந்தைகள் கர்ப்பிணிகளையும் அதிக தாக்கத்துக்கு உட்படுத்தி மரணங்களையும் ஏற்படுத்தி வருகிறது. சுகாதார பராமரிப்பு எல்லையை மீறாத வகையில் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை மிக இறுக்கமாக பின்பற்ற முன்வருமாறும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இனி இந்த 8 விடயங்களை செய்ய TIN இலக்கம் அவசியம்!

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, 2026 நவம்பர் 1-ஆம் திகதி...

7 வயதில் இந்தியா சென்ற இலங்கை தமிழ் இளைஞனின் கண்ணீர்க்கதை!

ஏழு வயதில் படகில் வந்து மீட்கப்பட்ட இலங்கை இளைஞர் தனக்கு அடையாள...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்