25 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

கொரோனா அறிகுறியை சாதாரண காய்ச்சலென நினைத்து வேலைக்கு சென்ற பெண் உத்தியோகத்தர்: வடக்கு சுகாதார திணைக்களத்திற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நிதிப் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த ஊழியர் கடந்த வாரம் கொழும்புக்குச் சென்று பின் பொதுபோக்குவரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியிருந்தார்.

இதன் பின்னர் அவருக்கு காய்ச்சல், தடிமன் ஏற்பட்டுள்ளது. எனினும், அதை கொரோனா அறிகுறியாக கருதாத அவர் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஊழியர் போக்குவரவுக்கான வாகனத்தில் பிற ஊழியர்களுடன், யாழிலிருந்து கிளிநொச்சிக்கு தினசரி கடமையாற்ற வந்து சென்றிருக்கின்றார்.

இந்த நிலையில் இன்று (04) இரண்டாவது கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதற்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது அவருக்கு காணப்பட்ட அறிகுறியை கொண்டு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் குறித்த ஊழியருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஊழியர் கிருஸ்ணபுரம் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ள அதேவேளை, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை
ஊழியர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவருடன் பணியாற்றிய நிதிக்கிளையினர் மற்றும் வாகனத்தில் சென்று வந்த ஊழியர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோய் அறிகுறிகள் தென்பட்டால் வெளியில் செல்வதனை தவிர்த்து சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளவதோடு, பரிசோதனைக்கும்
உட்படுத்திக்கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்தி வரும் சுகாதார திணைக்களப் பணியாளர்களே அதனை கருத்தில் எடுக்காது நடந்துகொண்டமை
விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தற்போது நோய்பரவல் அதிகமாக காணப்படுவதனால் பொது மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் பரந்துபட்ட அளவில் மேற்கொள்ளவதோடு,தாங்களும் குறித்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
2
+1
2
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

எதிர்ப்புகளை புறக்கணித்து, மாற்றத்திற்கான பயணத்தில் அரசாங்கம்

east tamil

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

east tamil

“இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது” – சசிகுமார்

east tamil

தனியார் பேருந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Pagetamil

Leave a Comment