மேலும் 9 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 09 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (02) அறிவித்தார். இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்கை 696 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்-

கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த, 94 வயதான ஆண் ஒருவர், கெப்பித்திகொல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் ஏப்ரல் 29இல் நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 காரணமான உக்கிர நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த, 51 வயதான ஆண் ஒருவர், வெலிக்கந்தை விசேட கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (01) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட சிறுநீரக நோய் நிலை மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெவ்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (01) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான பெண் ஒருவர், பெனிதெனிய சிகிச்சை நிலையத்தில் இருந்து பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (02) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த, 86 வயதான பெண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார், இவரது மரணம் நேற்று (02) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியா, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நிலை, ஆஸ்த்துமா மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த, 87 வயதான ஆண் ஒருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (01) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, இருதய நோய் நிலை மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண் ஒருவர், கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, வெலிக்கந்த விசேட சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (02) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரகாமுர பிரதேசத்தைச் சேர்ந்த, 53 வயதான ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கட்டுகஸ்தோட்டை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (02) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான ஆண் ஒருவர், தனது வீட்டில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த 30ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நெஞ்சுத் தொற்று நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்