மேல் மாகாணத்தில் இருந்து நேற்று 1,014 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று நாடு முழுவதும் 1,891 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். தொற்று பரவல் ஏற்பட்ட நாளில் இருந்து, பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 111,753 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பில் இருந்து 387 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களில் 81 பேர் பிலியந்தலவைச் சேர்ந்தவர்கள்.
களுத்துறை மாவட்டத்திலிருந்து 330 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் 58 பேர் பாணந்துறை தெற்கையும், 52 பேர் மீகஹதென்னவைச் சேர்ந்தவர்கள்.
கம்பஹா மாவட்டத்திலிருந்து 297 பேர் அடையாளம் காணப்பட்டனர். நுவரெலியாவிலிருந்து 102 பேர், புத்தளம் 88, காலி 80, அனுராதபுரம் 71, இரத்தினபுரி 70, கண்டி 66, குருநாகல் 51, கேகாலை 47, திருகோணமலை 45,மொனராகலை 44, ஹம்பாந்தோட்டை, பதுளையிலிருந்து தலா 35, மாத்தளையிலிருந்து 22, பொலன்னறுவையிலிருந்து 19, மாத்தறையிலிருந்து 17, கிளிநொச்சியிலிருந்து 14, அம்பாறையிலிருந்து 7, முல்லைத்தீவிலிருந்து 6, யாழ்ப்பாணத்திலிருந்து 5, வவுனியாவிலிருந்து 3, மட்டக்களப்பிலிருந்து 2 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்த 48 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.