26.6 C
Jaffna
January 1, 2025
Pagetamil
இலங்கை

கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் தலைக்கவசம்: இலங்கையில் தயாரிப்பு!

களனி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவொன்று, கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.

முகக்கவசம் மற்றும் இதர முகத்தை மூடும் பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு பதிலாக இந்த ஹெல்மெட்டை பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சிக் குழு தெரிவித்தது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாத விதத்தில் ஹெல்மெட்டில் சிறப்பு அடையாளக் குறியீடு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ரங்கிக பண்டார மற்றும் அகில லன்சஹர ஆகியோரே இந்த ஹெல்மெ்டை தயாரித்தனர.

அந்த ஹெல்மெட் முதலில் காற்றை உள்ளீர்த்து, உள்ளே உள்ள வடிகட்டி மூலம்- முகக்கவசத்தின் பணியை செய்யும்- சுத்தமான காற்றை உள்ளே அனுப்பும்.

ஹெல்மெட்டிற்குள் உள்ள அசுத்த வளியை வெளியேற்ற சிறிய மின்விசிறி பாணி அமைப்பொன்று உள்ளது. இதன்மூலம் அணிந்திருப்பவர் வியர்வை போன்ற அசௌகரியத்தை சந்திக்க மாட்டார் என தயாரிப்பு குழு தெரிவித்தது.

ஹெல்மெட்டில் ஒரு ஐஆர் சென்சர் அமைப்பும் உள்ளது. அணிந்திருப்பவரை ஒரு மீற்றருக்குள் நெருங்கும் யாருக்காவது அதிக உடல் வெப்பநிலை இருந்தால் உடனே எச்சரிக்கும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய வருடத்தில் ஆரம்பமாகிய “க்ளீன் ஶ்ரீலங்கா”

east tamil

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விநியோகம்

east tamil

வேலணை பிரதேச வைத்தியசாலை சிக்கலுக்கு சுமுக தீர்வு: 24 மணித்தியால சேவை தொடரும்!

Pagetamil

புலிகளால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆபத்து இல்லை – சரத் பொன்சேகா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment