கொட்டகலை வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலத்த காயம்!

Date:

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நேற்று இரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற வேன் ஒன்று, கொட்டகலை பகுதியிலிருந்து கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியுடன் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேன், முச்சக்கரவண்டியுடன் மோதிய பின், முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கற்பாறையுடன் மோதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

வேன் சாரதி திம்புள்ள பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் கிணற்றைச் சுத்தம் செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிணறு துப்புரவு செய்தபோது தோட்டாக்கள் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கிணறு...

தபால்காரரின் படுக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 இற்கும் அதிக கடிதங்கள்

ஹல்தும்முல்லையில், தபால்காரர் ஒருவர் தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த, விநியோகிக்கப்படாத...

கிழக்கின் பாதுகாப்பும் தேசிய ஒற்றுமையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பு! – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்