அடுத்த வாரம் நீதிமன்ற நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்படுகிறது!

Date:

நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் அடுத்த வாரம் இடைநிறுத்தப்படுகிறது. அவசரமான வழக்குகளும், பிணை வழக்குகளும் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நீதிச்சேவை ஆணைக்குழு செலயகத்தினல் இன்று சகல நீதிவான்களிற்கும் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையின்படி, நாளை 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை ஒரு வழக்குகளும் அதாவது பிணை சம்பந்தமான, நீதிபதி அவசரமென கருதம் வழக்குகள் தவிர்ந்த அல்லது ஒரு கட்சி அல்லது சட்டத்தரணி அவசரமென கேட்டுக்கொள்ளும் வழங்குகள் தவிர்ந்த எந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

நீதிமன்ற பதிவாளர்கள், நீதிபதிகள் ஆகக்குறைந்த ஊழியர்களை பணிக்கமர்த்தி செயற்பட வேண்டும்

பிணை விண்ணப்பங்களை காணொளி வழியாகவே விசாரணைக்குட்படுத்த வேண்டும்.

சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்களை நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

ஒத்திவைக்கப்படும் வழக்குகளின் அடுத்த வழக்கு தவணை திகதியை, வழக்கு விசாரணைக்கு முதல் நாள் அல்லது அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு முன்னர் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்