27.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
சினிமா

வெற்றிமாறனின் விடுதலையில் வாத்தியாராக நடிக்கும் விஜய் சேதுபதி; 5 மொழிகளில் ரிலீஸ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை படத்தில் அவரின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் படத்திற்கு விடுதலை என்று தலைப்பு வைத்துள்ளனர். விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆவலை தூண்டின.

அதிலும் குறிப்பாக கையில் விலங்குடன் விஜய் சேதுபதி டீ குடிக்கும் போஸ்டர் தான் ரசிகர்களை கவர்ந்தது. விடுதலை படத்தில் போலீஸாக நடிக்கிறார் சூரி. அவருக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. அது குறித்து அறிந்த ரசிகர்களோ, தன் வயது நடிகருக்கு அப்பாவாக நடிக்க இந்த விஜய் சேதுபதிக்கு எப்படித் தான் மனம் வந்ததோ என்றார்கள்.

விஜய் சேதுபதிக்கு மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. பாலிவுட்டுக்கும் செல்கிறார். அதை மனதில் வைத்து விடுதலை படத்தை தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

விடுதலை படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டாரே என ரசிகர்கள் ஃபீல் செய்தார்கள். இந்நிலையில் தான் அவர்கள் மகிழ்ச்சி அடையும்படியான தகவல் வெளியாகியிருக்கிறது.

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். இது வீரப்பனின் வாழ்க்கை பற்றிய கதை என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவரோ வேறு மாதிரி சொல்கிறார். அவர் கூறியிருப்பதாவது,  விடுதலை படத்திற்கும் வீரப்பனின் கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 1980களில் தமிழ் தேசியம் அமைப்பை சேர்ந்த வாத்தியார் என்பவர் இருந்தார். ஆசிரியராக இருந்த அவர் பல நல்ல காரியங்களை செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

சொல்லப் போனால் விடுதலை படம் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை சுற்றியே நகரும். விஜய் சேதுபதியை அந்த நிஜ வாத்தியார் போன்று காட்ட படக்குழு முயற்சி செய்துள்ளது.

அண்மையில் செங்கல்பட்டில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு பெரிய போலீஸ் கேம்ப் செட் போட்டு 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்த பிறகு சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு செல்கிறது படக்குழு. அங்கு தான் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

Leave a Comment