அஸ்வின் பற்றி மனம் திறந்து பேசிய குக் வித் கோமாளி ஷிவாங்கி!

Date:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் ஷிவாங்கி சின்னத்திரை, பெரியதிரை, நண்பன் அஸ்வின் பற்றி பேட்டி கொடுத்துள்ளார்.

ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி தன் நண்பர் அஸ்வின் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியிருக்கும் ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார். இந்நிலையில் சினிமா, குக் வித் கோமாளி, அஸ்வினுடனான நட்பு குறித்து ஷிவாங்கி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு சமைக்கத் தெரியுமா என்று கேட்டார்கள். நான் தெரியாது என்று சொன்னதும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டார்கள். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது என்றார்.

சமைக்கவே தெரியாத ஒரு ஆளை சமையல் நிகழ்ச்சிக்கு வர சொல்கிறார்களே என நினைத்தேன். ஆனால் முதல் இரண்டு எபிசோடுகளுக்கு பிறகு எனக்கு கான்செப்ட் புரிந்துவிட்டது. அஸ்வின் ஒரு அர்ப்பணிப்பான ஆள். அவரை முதல் முறை பார்த்தபோது அவருக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்று நினைக்கவே இல்லை என்று ஷிவாங்கி தெரிவித்துள்ளார்.

என்னடா இது, இவ்ளோ அழகான ஒரு பையனு சொல்லிட்டு தான் நான் அஸ்வினுடன் பேச ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் அவர் அமைதியாக இருந்தார். அது தான் என் ஆவலை தூண்டியது. நான் நானாக இருக்க செய்தார் அஸ்வின். அவர் ஒருபோது முகம் சுளித்தது இல்லை. அதனால் தான் எங்கள் ஜோடி வெற்றி பெற்றது. அனைத்தையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வார் என்கிறார் ஷிவாங்கி.

எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். என் பெற்றோர் பாடுவார்கள் என்பதால் பின்னணி பாடும் உலகம் எனக்கு நன்கு பழக்கம். சிறு வயதில் இருந்தே ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு செல்கிறேன். ஆனால் தொலைக்காட்சிக்கும், சினிமாவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. வித்தியாசம் இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. மக்களை மகிழ்விக்கும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என ஷிவாங்கி கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

28 வயது காதலனுக்காக குழந்தையை வீதியில் விட்டுச்சென்ற 38 வயது தாய்

வத்தேகம பொலிஸ் பிரிவின் யதிரவன பகுதியில் உள்ள ஒரு குறுக்குச் சாலையில்,...

ஷிரான் பாசிக் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கைது செய்யப்பட்ட, இலங்கையின் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்