வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் திருமதி சோபா ரஞ்சித்தின் உத்தியோகபூர்வ வாகனம் மோதி, 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. எனினும், அவர் சம்பவத்தை மறைக்கும் விதமாக கால்நடைகளை அங்கிருந்து அகற்றியதாக பிரதேச மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.
இன்று (2) மாலை இந்த சம்பவம் நடந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தன் கலந்து கொண்ட நிகழ்வொன்று சுங்கான்கேணியின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்சில் கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்பிலிருந்து சோபா ரஞ்சித் உத்தியோகபூர்வ வாகனத்தில் வந்தார்.
சந்திவெளி வேப்பையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் வீதியில் மாடுகளை மோதித்தள்ளியது. இதில் 3 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
மேலும், நிலைமை மோசமாவதற்கு முன்னதாக பிரதேசசபை உழவு இயந்திரத்தை வரவழைத்து உயிரிழந்த மாடுகளை அப்புறப்படுத்தியுள்ளார். மாட்டு உரிமையாளர் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, உயிரிழந்த மாடுகளின் சடலங்களை தவிசாளர் அப்புறப்படுத்தினார்.
இதேவேளை, மக்களின் வரிப்பணத்திலான பிரதேசசபை சொத்தான வாகனத்தை, தவிசாளர் நீண்டகாலமாக தனது சொந்த தேவைக்கும் பயன்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு.
வாகரைக்கு மீன் வாங்க செல்வதானாலும் சரி, தான் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் வாரத்திற்கு 3 நாட்கள் செல்வதென்றாலும், மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்து கல்வி கற்கும் பிள்ளையை பார்வையிட செல்வது என அனைத்து தேவைகளையும் பிரதேசசபை வாகனத்தை பயன்படுத்துவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு உண்டு.
இந்த நிலையில் வாகனம் இன்று மாடுகளை மோதிக் கொன்றுள்ளது.