வல்லிபுர கோயிலில் வம்பு செய்த ரௌடிகள்: யுவதி மீதும் தாக்குதல்!

Date:

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு பொங்கலிற்காக சென்ற யுவதி மீது ஆலய வளாகத்தில் வைத்தே ரௌடிகள் அத்துமீறி நடந்துள்ளனர். யுவதியும் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று  நடந்தது.

நேற்று பொங்கல் செய்ய வந்த குடும்பமொன்றில் இரண்டு யுவதிகள் மீது துன்னாலை பகுதியை சேர்ந்த ரௌடிக்குழு ஒன்று அத்துமீறி நடந்துள்ளது. ஒரு யுவதி ரௌடிகளின் அத்துமீறலை தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரௌடியொருவன் யுவதியை தாக்கினான். யுவதியும் பதிலுக்கு தாக்கினார்.

ஊரில் பிரமலமான ரௌடிகளான தமக்கு கைநீட்டலாமா என்ற  கோபத்தில் அந்த யுவதியை இழுத்து, அருகிலுள்ள மரமொன்றில் மோத வைத்து தாக்கினர்.

யுவதியின் உறவினர்கள் அவ்விடத்திற்கு வர கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர், அவ்விடத்திலிருந்து விலகி யுவதிக முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு உறவினர்கள் சென்றனர். அ

துன்னாலையை சேர்ந்த ரௌடிக்குழு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து யுவதிகளிற்கு தொல்லை கொடுப்பது வாடிக்கையென பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், யாரும் அதை கண்டு கொள்வதில்லை.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்