மட்டக்களப்பு நகர் திஸவீரசிங்கம் பிரதேச பகுதி தனிமைப்படுத்தப்பட்டது: அங்கு 24 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர் பகுதி திஸவீரசிங்கம் சதுக்கத்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட மூன்று குறுக்கு வீதிகள் உட்பட்ட பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.
அந்த பகுதிக்கு போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திஸவீரசிங்கம் பகுதியில் நோயாளி ஒருவர் இனங்காணபட்டதை அடுத்து எழுந்தமானதாக 24 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 11 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட தை தொடர்ந்து இந்த முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் இனங்காணப்பட்டனர். 12 பேர் மட்டக்களப்பு பிரதேச செயலக பிரிவு, 4 பேர் களுவாஞ்சிக்குடி, 8 பேர் ஓட்டமாவடி, 5 பேர் ஏறாவூர், 2 பேர் வாழைச்சேனை, ஒருவர் பொலிசார் உட்பட்ட 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.