தளபதி ஸ்டாலினின் வெற்றி இலங்கை தமிழரின் விடுதலைக்கு பேராதரவை உருவாக்கும்: மாவை வாழ்த்து!

Date:

திமுக தலைமையயில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியேதான். தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கைத் தமிழினமும், தமிழர் தேசமும் விடுதலை பெறுவதற்கும் அனைத்துக் கட்சிகளுடனும் மத்திய அரசுடனும் இணக்கம் கொண்டு செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், அந்த கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து மாவை சோ.சேனாதிராசா வெளியிட்டுள்ள செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில்,

தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடைபெற்ற தமிழ் நாட்டின் சட்ட சபைத் தேர்தலில் திமுக தலைமையயில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியேதான்.
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.
இலங்கைத் தமிழினமும், தமிழர் தேசமும் விடுதலை பெறுவதற்கும் அனைத்துக் கட்சிகளுடனும் மத்திய அரசுடனும் இணக்கம் கொண்டு செயற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறோம்.

திராவிட இயக்கத் தலைவர் தமிழ் நாட்டு மக்கள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கொள்கை வழி நின்று எதிர்காலத்திலும் தலைவர், தளபதி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் வெற்றிக்கும் உழைத்திட இலங்கைத் தமிழர் தரப்பில் அணைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், வெற்றி பெறவைத்த மக்களுக்கும் எம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்