Pagetamil
முக்கியச் செய்திகள்

அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் மூடல்… 20 ஆம் திகதி வரை திருமணங்கள் இல்லை: புதிய சுகாதார வழிகாட்டல் குறிப்பு!

அனைத்து சினிமா அரங்குகள், மசாஜ் பார்லர்கள், இரவு விடுதிகள், கசினோக்கள் மற்றும் பந்தய மையங்களை உடனடியாக மூட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது கொரோனா அபாயத்தின் 3 வது கட்டத்தில் நாடு இருக்கும் நிலையில்,  பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், குறைந்த பட்ச ஊழியர்களை தங்கள் அலுவலகங்களுக்கு அழைக்கவும், முடிந்தால், ஊழியர்களை வீட்டிலிருந்து ஒன்லைனில் வேலை செய்ய அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

முதலீட்டு வாரியங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய தொழிற்சாலைகள் ஒரு உயிர் குமிழிக்கு உட்பட்டு பணியாளர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

பேக்கரி, ஆடையகங்கள், சலூன், மின்சார, ஹாட்வெயார், சலவையகங்கள் தனது விஸ்தீரத்தை பொறுத்து  25 சதவீத கொள்ளவவு வாடிக்கையாளர்களையே கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டுகள் 25 வீத வாடிக்கையாளர்களை பேணுவதுடன், இருவருக்கும் இடையில் 1.5 மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும்.

உணவகங்கள் மொத்த திறனில் 25 வீதமாக வாடிக்கையாளர்களையே கொண்டிருக்க வேண்டும்.

திறந்த சந்தைகள், பொருளாதார மையங்களை பராமரிக்கும் போது, ​​25 சதவீத நபர்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

மேலதிக வகுப்புகள், பாடசாலைகள், பௌத்த அறநெறி பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் முழுவதுமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளன.

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் அடுத்த திங்கட்கிழமை முதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் எதிர்கால திருமணங்களை நடத்தலாமா என்பது குறித்த முடிவு மே 20 அன்று எடுக்கப்படும் என்றும் கூறுகிறது.

வெசாக், நோன்பை பொதுமக்கள் வீட்டிலிருந்தே அனுட்டிக்க வேண்டும்.

ஹொட்டல்களில் ஒன்றுகூடவும், விருந்துகளிற்கும் அனுமதியில்லை.

இறுதிச் சடங்குகள் 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும். மருத்துவமனையில் இருந்து உடலை ஒப்படைத்த நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்கு செய்யப்பட வேண்டும். ஒரு நேரத்தில் இறுதி வீட்டில் தங்கக்கூடிய அதிகபட்ச மக்கள் எண்ணிக்கை 25 ஆகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

Leave a Comment