26.3 C
Jaffna
March 2, 2025
Pagetamil
உலகம்

விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி; ரஷ்ய நிறுவனம்!

கார்னிவாக்-கோவ் எனும் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதாக ரஷ்யாவின் விவசாய கண்காணிப்புக் குழு ரோசல்கோஸ்னாட்ஸர் அறிவித்துள்ளது.

17,000 டோஸின் முதல் தொகுதி ரோசல்கோஸ்னாட்ஸரின் துணை நிறுவனமான ஃபெடரல் சென்டர் ஆஃப் அனிமல் ஹெல்த் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கண்காணிப்புக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிக்கு அதிக உள்நாட்டு தேவை உள்ளது மற்றும் முதல் தொகுதி அளவு நாட்டிற்குள் விநியோகிக்கப்படும் என்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டியுள்ளன என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி திறன் இப்போது மாதத்திற்கு 3 மில்லியன் டோஸ் ஆக உள்ளது. மேலும் இது எதிர்காலத்தில் 5 மில்லியனாக அதிகரிக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் ரோசல்கோஸ்னாட்ஸரின் தலைவரின் ஆலோசகரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டில், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில், தடுப்பூசியை விரைவாக பதிவு செய்ய ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.ரோசல்கோஸ்நாட்ஸர் மார்ச் 31 அன்று கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

திருமணம் இல்லையா? வேலையும் இல்லை! – புதிய சட்டம்

Pagetamil

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலை சிறிய முன்னேற்றம்

Pagetamil

Leave a Comment