மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அந்தந்த மாநிலங்களில் நடந்து வரும் கொரோனா எழுச்சியை எதிர்த்துப் போராடுவதில் மாநிலங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வெற்றியும் கிடைக்க வேண்டும் என்று அவர் ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.
மோடி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இன்று, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை தங்கள் மாநில உருவாக்க தினத்தை குறிக்கின்றன. இரு மாநிலங்களும் சிறந்த நபர்களுக்கு சொந்தமானவை. அவை தேசிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளன. இந்த மாநிலங்கள் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடட்டும். இந்த மாநிலங்களின் மக்கள் சிறந்த ஆரோக்கியத்திற்கான ஆசீர்வாதம் பெறட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலைகளால் மகாராஷ்டிரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தும் நாட்டின் பல மாநிலங்களைப் போலவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 62,919 புதிய கொரோனா பாதிப்புகளும் 828 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பாதிப்புகளின் தினசரி உயர்வு வியாழக்கிழமை இருந்த 66,159’ஐ விட நேற்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இறப்புகளின் எண்ணிக்கை முந்தைய நாள் 771 உடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. இதே போல் குஜராத்தின் கொரோனா பாதிப்பு நேற்று 14,605 புதிய பாதிப்புகளுடன் 5,67,777’ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,183’ஆக உயர்ந்தது. மேலும் 173 பேர் இறந்தனர்.