நக்கல், நய்யாண்டிக்கு பெயர் போனவர் நடிகர் சத்யராஜ். கூடவே கவுண்டமனி சேர்ந்துவிட்டால் சொல்லவே வேணாம். அந்தளவிற்கு சத்யராஜ் – கவுண்டமனியின் நக்கல், நய்யாண்டி இருக்கும். பெரும்பாலான படங்களில் இருவரும் சேர்ந்தே நடித்துள்ளனர். அப்படியில்லை என்றால், மணிவண்ணன் உடன் இணைந்து பல படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார்.ஆரம்பம் முதலே வில்லன், துணை நடிகர், கேரக்டர் ஆர்டிஸ்ட் என்று தான் சத்யராஜ் பல படங்களில் நடித்திருந்தார்.
சத்யராஜ் நடிப்பில் வந்த கடலோர கவிதைகள் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, சத்யராஜின் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியது. இதே போன்று பெரியார் படமும் அமைந்தது. கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் எம்ஜிஆர் மகன், மடை திறந்து, பார்ட்டி, தீர்ப்புகள் விற்கப்படும், காக்கி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில், எம்ஜிஆர் மகன் கடந்த 23 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.எப்போதும், சத்யராஜ் தனது குடும்பத்தினரை வெளியில் காட்டியது இல்லை. இந்த நிலையில், 90 வயது நிரம்பிய தனது அம்மாவுடன் இருக்கும் சத்யராஜின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.