முத்துஐயன்கட்டில் துயரம்: வர்த்தக நிலைய தீயில் உரிமையாளர் பலி!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் நேற்று முன்தினம் (29) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்ததோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் சேதமடைந்தது. முற்றாக எரிந்த ஒரு கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்குள்ளானார்.

முத்துஐயன் கட்டை சேர்ந்த செல்லப்பா அரிராசசிங்கம் (72) என்பவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (01) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக...

விகாரைக்குள் ‘கசமுசா’: மற்றொரு மன்மதராசா சிக்கினார்!

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி...

தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சாலேவுக்கு மனநோயாம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்