டோக்கியோ சுமோ மல்யுத்த போட்டியில் தலையில் காயமடைந்த வீரர் உயிரிழப்பு;அதிர்ச்சி சம்பவம்!

Date:

ஜப்பான்: டோக்கியோவில் நடைபெற்ற சுமோ மல்யுத்த போட்டியின் போது தலையில் காயமடைந்த வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ நகரில் கடந்த மார்ச் 26ம் தேதி சுமோ மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் 28 வயதான மிட்சுமி அமானோ கலந்து கொண்டார். அப்போது எதிர் போட்டியாளருக்கும் இவருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றதில் மிட்சுமி அமானோ தூக்கிவீசப்பட்டார்.

அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போட்டியின் போது மிட்சுமி அமானோ கீழே விழுந்து அசைவின்றி காணப்பட்ட வீடியோ வெளியானது.

அந்த வீடியோ அப்போதே பலரால் பகிரப்பட்டு, உடனடியாக மருத்துவ உதவி ஏன் தரப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், சுமோ போட்டி விதிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மல்யுத்த போட்டியில் கலந்துகொண்ட வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் போது காயமடைந்த சுமோ மல்யுத்த வீரர் உயிரிழப்பு | Sumo wrestler  dies one month after suffering a concussion in Japan | Puthiyathalaimurai -  Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்