கொரோனா தொற்றுக்கு இந்திய ஆணழகன் பலி: வறுமையில் வாடிய சோகம்!

Date:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் பலியானார். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒட்சிசன் துணையுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் எண்ணிக்கை உலக அளவை தாண்டி செல்கிறது. கொரோனா தொற்று யாரையும் விட்டு வைக்கவில்லை.

இந்த வரிசையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மும்பை நவி பகுதியைச் சேர்ந்தவர் ஜகதீஷ் லாட்(34). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

உடலை பேணுவதில் அதிக ஆர்வம் கொண்ட ஜகதீஷ் லாட் உள்ளூர் போட்டி மாநிலப்போட்டி என அகில இந்திய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றவர். கிரிக்கெட் உள்ளிட்டவைகளுக்கு கொடுக்கும் ஊக்கம் மற்ற போட்டிகளுக்கு மதிப்பிருக்காது என்பது ஜகதீஷ் லாட் விவகாரத்திலும் நடந்துள்ளது.

உலக ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் தனது வாழ்க்கையில் உரிய அரசுப்பணி கிடைக்காமல் வறுமையால் வாடி வீட்டு வாடகைக்கூட கொடுக்கமுடியாத நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வேயில் வேலைக்கு முயற்சி செய்து வந்த ஜகதீஷ் லாட்டுக்கு மும்பை மாநகராட்சியில் பணி கிடைத்தும் வயது காரணமாக கிடைக்காமல் போனது.

ரயில்வேயில் வேலைக்கு முயற்சித்து வந்த அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பரோடாவில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை நிர்வாகிக்கும் பணியில் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக லொக்டவுன் பிரச்சினை காரணமாக உடற்பயிற்சி செய்வதையும் விட்டுவிட்டார். வீட்டு வாடகை கொடுக்காததால் அவர் வீட்டை காலி செய்து வேறு ஊர் போகவும் உரிமையாளர் அனுமதிக்கவில்லை என்பதால் பரோடாவிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 நாட்களாக ஒட்சிசன் உதவியுடன் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்