கடலில் மின்னல் தாக்கி மீனவர்கள் இருவர் பலி!

Date:

சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள்  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஜனாஸாவாக கரைதிரும்பிய சோகம் இன்று இரவு சாய்ந்தமருதில் பதிவானது. கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழிலை செய்துவந்த இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்ததாக இவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருதை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (42), எம்.எஸ். அர்சாத் (35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளதுடன் இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (43) மரணித்த (இப்ராஹிம் இக்பாலின் சகோதரர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சாய்ந்தமருதில் சோகம் நிலவிவருகிறது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்