மேலும் 6 மரணங்கள்!

Date:

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்கை 667 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (29) அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-

பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 49 வயதான பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலை வைத்திய பீட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 85 வயதான பெண் ஒருவர், கண்டி பொது வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த 27ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 37 வயதான பெண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம்(28) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், நாட்பட்ட சிறுநீரக நோயுடன், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான பெண் ஒருவர், வெலிமடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (28) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த 27ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று மற்றும் பக்கவாதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 61 வயதான பெண் ஒருவர், நாவலபிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (28) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்