எதிர்வரும் மே 4,5ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
மே 4ஆம் திகதி கொரோனா நிலைமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணையும், 5ஆம் திகதி துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூல விவாதத்திற்கு 2 நாட்களை ஒதுக்கும்படி எதிரணி கோரிய போதும், அரசு ஒரு நாளையே ஒதுக்கியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1