கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் கொரோனா பரவல் தொடர்பான ஊடக சந்திப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதன் போதே மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவம் மற்றும் பொலீசார் கடமையில் உள்ளனர். சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்துடன் தற்போது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து தீவிர கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பி சி ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகிறது. இதுவரையில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 10பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்கள்.
அண்மையில் பாடசாலை மாணவிகள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவிகளுடன் தொடர்பு பட்டவர்கள் தனிமைபடுத்தப்படுள்ளனர். இவ் மாணவிகள் அடங்கலாக கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து 139 பேர்
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 105 பேர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 34 பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களும் இரண்டு
வாரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளன எனவும் அதை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.