கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு: 24 பேரை பிணையெடுக்க குவிந்த 224 பேர்!

Date:

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் கடந்த நேற்று வியாழக்கிழமை 28 பேரை பிணை
எடுப்பதற்காக 224 பேர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

கடந்த  ஈஸ்டர் தினத்தன்று பூநகரி பிரதேச செயலக பிரிவு குட்பட்ட நாச்சிக்குடா மற்றும் கரடிக்குன்று கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து பொலீஸாரினால் 28 கைது செய்யப்பட்டனர்.

மேலும் 15 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற
நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்ப்படுத்தபட்டதனை
தொடர்ந்து அவர்கள் கடந்த வியாழக்கிழமை பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான்
நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன் போது கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் ஊருக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, தாக்கியமை, என எட்டு முறைப்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனடிப்படையில் ஒவ்வொருவருக்கும் B/400,B/405,B/406, B/407, B/463, B/464, B/465, B/466
ஆகிய எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வகையில் ஒரு வழக்குக்கு
ஒரு ஆட்பிணை என்ற அடிப்படையில் ஒருவருக்கு எட்டு ஆட் பிணையில் செல்ல
நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது.

ஆகவே மேற்குறித்த 28 பேரையும் பிணைக்க எடுக்க குறித்த கிராமங்களிலிருந்து
224 பேர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்