நான் உலகத்திலேயே மிகச்சிறிய அளவு இருக்கக்கூடிய முதல் வகுப்பு விமானத்தில் பயணம் செய்தேன் என பென் மோரிஸ் என்னும் யூடியூபர் தன்னுடைய சேனலில் வீடியோவுடன் பதிவிட்டிருக்கிறார்.
யூடியூபர் பென் மோரிஸ் பகிர்ந்த இந்த வீடியோ வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
பென் மோரிஸின் இந்த வித்தியாசமான அனுபவத்தை மிகக் குறைந்த செலவில் சாத்தியப்படுத்தியதை ஆவணப்படுத்துவதாக இந்த வீடியோ அமைந்திருக்கிறது.
மோரீஸ் இந்த பயணத்தில் துபாயில் இருந்து செல்லும் எமிரெட்டஸ் விமானத்தில் பஹ்ரைனுக்குச் சென்றிருக்கிறார். கிட்டதட்ட ஒரு மணி நேரம் 15 நிமிட பயணம் அது. இந்த வீடியோவில் அவர், முதல் வகுப்பில் இருந்த காலை உணவு உட்பட பல ஆடம்பரமான விஷயங்கள் பற்றிய அவரது அனுபவங்களை எடுத்துக் காட்டுயிருக்கிறார்.
அந்த வீடியோவில், மோரீஸ் விமானத்தில் ஏறி தன்னுடைய தனி அறைக்குச் செல்வதிலிருந்து தொடங்குகிறது. மோட்டார் பெட், டீவி, கேம், கண்ணாடி விளக்குகள், மினிபார் போன்ற பல சலுகைகள் அந்த ரூமில் இடம்பெற்றிருக்கிறது. இவை அத்தனையையும் வெறும் 60 டாலருக்குள் தான் புக் செய்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
வைரலாகி வந்த இந்த வீடியோ கிட்டதட்ட 3.5 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஏராளமானோர் இதை ஷேர் செய்தும் வருகிறார்கள்.




