பிரிட்டனில் உள்ள தீம் பார்க் ஒன்றில், ரோலர் கோஸ்டர் நடுவில் நின்றதன் காரணத்தினால், அங்கிருந்து கீழே குதிக்குமாறு நிர்பந்திக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ய சிலர் பயந்தாலும், பலரும் இந்த சாகச பயணத்தை விரும்பவே செய்கின்றனர். ஆனால், அவர்கள் விரும்பி செய்த பயணம், அவர்களுக்கே ஒரு சோகமான அதே சமயம் மனதில் நீங்கா வண்ணம் வடுவை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, லாங்கஷியர் லைவ் ஆன்லைன் பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டு உள்ளதாவது, பிரிட்டனின் பிளாக்பூல் பிளசர் கடற்கரை பகுதியில் உள்ள பெப்சி மாக்ஸ் பிக் ஒன் தீம் பார்க்கில் ரோலர் கோஸ்டர் பயணம் மேற்கொண்டவர்கள், ஏப்ரல் 25 ஆம் தேதி நிகழ்ந்த நிகழ்வை, அவர்கள் தங்கள் வாழ்நாளில் எப்போதும் மறக்க மாட்டார்கள்.
அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?. எப்போதும் போல உற்சாகத்துடன் மக்கள் ரோலர் கோஸ்டரில் உற்சாக பயணம் மேற்கொண்டு வந்தனர். அந்த தீம் பார்க், ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு பெயர் பெற்றது என்பதால், அங்கு ஒரே தடத்தில் பல்வேறு ரோலர் கோஸ்டர்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்தளவிற்கு, அப்பகுதி மக்களிடையே, ரோலர் கோஸ்டர் பயணம் என்பது மிகவும் பிரசித்தம் ஆகும்.
ரோலர் கோஸ்டர் சென்று கொண்டிருந்த போது, நடுவானில் திடீரென்று நின்றது. உடனடியாக, மக்கள், ரோலர் கோஸ்டரில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அப்போது அந்த கோஸ்டரை தொடர்ந்து பின்னாலேயே, மற்றொரு கோஸ்டர் வருவதால், நின்றுபோன கோஸ்டரில் இருந்த மக்கள் 200 அடி உயரத்தில் இருந்து குதிக்குமாறு அந்நிறுவனம் பணித்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின் அவர்கள் ஒவ்வொரு படியாக கீழிறங்கி வந்ததாக அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




