அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியை குழந்தைய போன்று காக்கும் படக்குழுவினர்!

Date:

ஹைதராபாத்தில் நடந்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியை குழந்தையைப் போன்று படக்குழுவினர் பாதுகாத்து வருகின்றனர்.இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, சூரி, சதீஷ், கீர்த்தி சுரேஷ், ஜகபதி பாபு, வேல ராமமூர்த்தி, தவசி, ஜார்ஜ் மரியன், பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப், கபாலி விஸ்வநாத் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படக்குழுவினருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாகவும், ரஜினியின் உடல்நிலை காரணமாகவும் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. எனினும், மீண்டும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்னதான் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழுவினர் பின்பற்றி வந்தாலும் ரஜினியை ஒரு குழந்தையை பார்ப்பது போன்று பாதுகாத்து வருகின்றனர்.

சரி, அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்பு தளத்திற்குள் நுழையும் முன் அவர்கள் PPE suit எனப்படும் உடல் முழுவதையும் மறைத்திருக்கும் வகையிலான மருத்துவமனையில் இருப்பது போன்று உடை அணிந்திருக்க வேண்டும். ஒளிப்பதிவாளராக இருந்தாலும் சரி, மேக்கப் மேனாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் இது போன்று உடை அணிந்திருக்க வேண்டும். இவர்களைத் தவிர நடிகர், நடிகைகள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அதோடு, ஃபேஸ் ஷீல்டு எனப்படும் முகம் முழுவதையும் மூடியிருக்கும் வகையிலான ஒரு மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். இதே போன்று இயக்குநர் சிவா இரண்டு மாஸ்களை அணிந்திருந்து மைக் மூலமாக ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்க வேண்டும். இது தவிர, தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் இணைந்து ரஜினிகாந்தை ஒரு குழந்தையைப் போன்று பாதுகாத்து வருகின்றனர். எப்படி என்றால், அனைத்து நடிகர், நடிகைகளும் கிட்டத்தட்ட 10 அடி தூரத்திலிருந்து ரஜினியிடம் பேச வேண்டும். படப்பிடிப்பு காட்சி குறித்து விவாதிக்கும் போது இயக்குநர் சிவா 3 முதல் 4 அடி தூரத்திலிருந்து ரஜினியிடம் பேசுவார்.

பொதுவாக படக்குழுவினர் ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன்னதாக ரஜினியை சந் தித்து, அவரிடம் பட காட்சி குறித்து விவாதித்து அவரிடம் ஆசி பெற்று பிறகு தான் நடிக்க வருவர். ஆனால், தற்போது உள்ள சூழலில் ரஜினியின் தனிப்பட்ட உதவியாளர் மட்டுமே அவரிடம் பேசுவார். அவருக்கு மேக்கப் ஏதும் போட இருந்தால் அவர் தான் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரஜினிகாந்தின் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்ட து. தற்போது ரஜினி மற்றும் நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

ரஜினியின் காட்சிகள் மட்டுமே தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. வரும் மே 10 ஆம் தேதிக்குள் அண்ணாத்த படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி, வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்