இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தனது மனைவி சில்வியாவிற்கு சாண்டி மாஸ்டர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுப்பதில், டான்ஸ் மாஸ்டர்களின் பங்கு அதிகளவில் இருக்கிறது. டான்ஸ் மாஸ்டர்கள் கற்றுக் கொடுக்கும் நடனத்தைத் தான் பிரபலங்கள் ஒவ்வொரு பாடலுக்கும் ஆடுகின்றனர்.
அந்த வகையில், சின்னத்திரையில் டான்ஸ் மாஸ்டராக இருந்து வெள்ளித்திரையில் தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் சாண்டி மாஸ்டர். இவனுக்கு தண்ணில கண்டம் என்ற பட த்தின் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். வாலு, ஜித்தன் 2, கெத்து, சர்வம் தாள மயம், பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்கள் உள்பட ஒரு சில படங்களில் சிறப்புத் தோற்றம் முதல் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
பாரிஸ் ஜெயராஜ் பட த்தில் சாண்டி மாஸ்டர் வரும் புளி மாங்கா புளீப் வலி மாமே வலிப் என்ற பாடல் ரசிகர்களிடையே அதிகளாவில் டிரெண்டானது என்பது குறிப்பிட த்தக்கது.
இவ்வளவு ஏன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். பிக்பாஸில் வரும் குரலுக்கு சொந்தக்காரரை குருநாதா என்று அழைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் அவரது குழந்தை ஆகியோரும் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சி கொடுத்த அமோக வரவேற்பு காரணமாக சினிமாவில் அதிக வாய்ப்புகள் பெற்று வருகிறார். தற்போது கூட விஜய்
தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் சாண்டி கலந்து கொள்ள இருக்கிறார் என்று புரோமோ வீடியோ மூலமாக தெரிகிறது. இந்த நிலையில், சாண்டியின் மனைவி சில்வியா 2ஆவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.
இதன் காரணமாக தனது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நட த்தி சாண்டி அழகு பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சில்வியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், என்ன ஆச்சரியம் என்றால், சாண்டியின் மகள் டஷா(தஷா) சில்வியாவுக்கு வளையல் போட்டுவிடுகிறார் என்பது தான். இதையடுத்து, பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் சாண்டி – சில்வியா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.